மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு தேவை கொண்ட குழந்தைகளின்  பல்வேறு தேவைகளுக்காக நாங்கள் முழுநேர பராமரிப்பு மற்றும் பயிற்சிகள் வழங்குகிறோம்.

 மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு தேவை கொண்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்துடனும்  மற்றும் சமூகத்தினருடனும் இயல்பாக வாழ ஊக்குவிப்பதும் ஆதரிப்பதும் CHERISH இன் கொள்கையாகும். முடிந்தவரை சுதந்திரமாக வாழ்வதற்கும் சமூகத்தின் உறுப்பினர்களாகப் பங்களிப்பதற்கும் தேவையான திறன்களுடன் அவர்களைச் சித்தப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

எங்கள் சேவை பெற தகுதி. 3 வயது முதல் இளைஞர்கள் வரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சிகள்  வழங்கப்படுகிறது.  மேலும், எங்களது மையத்தில் ஆண், பெண் இரு  பாலினத்தவர்கள்; அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்கள்; அனைத்து சமூக பொருளாதார பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் எங்கள் சேவையை வழங்குகிறோம்.  அதுமட்டுமில்லாமல், எங்கள் சேவை   குழந்தைகளிடம் காணும் குறைபாடுகளின் வரம்பில் அறிவுசார் குறைபாடு, பெருமூளை வாதம், மன இறுக்கம், மன நலிவுற்ற குழந்தைகள், கற்றல் குறைபாடு, கவனம் செலுத்துவதில் கோளாறு,  அதிவேகத்தன்மை, மனக்கிளர்ச்சி ஆகியவை அடங்கும்.

ஆரம்பக்கால கற்றல் கல்வித்திட்டம்

பள்ளிக்கல்வித்திட்டம்

தொழில்திறன்

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு திட்டம்

அன்றாட வாழ்க்கைக் கல்வி முறை

பயிற்சி

ஒவ்வொரு மாணவருக்கும் பின்வரும் மேம்பாட்டுத் திறன்களின் அடிப்படையில் தனிநபர்  கல்வித் திட்டங்கள் (IEPs) வடிவமைக்கப்பட்டுள்ளன:

  • திறன் கல்வி
  • சமூகக் கல்வி திறன்கள்
  • அன்றாட வாழ்க்கைச் செயல்பாட்டுத் திறன்
  • சுய உதவித் திறன்கள்
  • சிறுந்தசை மற்றும் பெருந்தசை இயக்கத் திறன்கள்
  • தொழில் திறன்கள்