நாங்கள் கேமரன் மலையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மற்றும் நல்வாழ்வு மையமாக இயங்கி வருகிறோம். எங்களுக்கு உங்களின் உதவி தேவை!
கேமரன் மலையில் உள்ள தானாராத்தாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நிரந்தர மையத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக CHERISH மையத்திற்கு நிலம் ஒன்றை பகாங் மாநில அரசாங்கம் வழங்கி உள்ளது. தற்பொழுது அதற்கான கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டிடம் சுமார் 7000 சதுர அடி பரப்பளவு கொண்ட 2 மாடி கட்டிடம் ஆகும். இப்புதிய கட்டிடத்தில் சுமார் 50 மாணவர்கள் வரை தங்கி பயனடைய முடியும் என்பதை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைகிறோம். இவ்வாண்டு இறுதிக்குள் அதற்கான கட்டிடப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிடப் பணிக்கான நிதி மதிப்பு 2.5 மில்லியன். தற்பொழுது நிதி இருப்பு பாதி இலக்கை அடைந்துள்ளோம். மேலும், நிதி இலக்கை முழுமை பெறவே தங்களை நாடுகிறோம். எங்கள் இலக்கை அடைய எங்களுக்கு ஆதரவு அளியுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் எதற்காக, ஏன் இதைச் செய்கிறோம்?
மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கும் சமூகத்தில் ஒரு பங்கு உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், அவர்களின் திறன்களைக் கண்டறிந்து அவர்கள் முழு திறனையும் அடைய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் . அவர்களுக்குச் சரியான கற்றல் சூழல் இருப்பதை உறுதி செய்யவும், சிறந்ததை வெளிக்கொணரக்கூடியவர்களால் வழிநடத்தப்படுவதையும், அவர்களுக்குத் தேவையான நம்பிக்கையை வழங்குவதையும் உறுதிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
நாங்கள் யார்
கேமரன் மலை வாழ் சிறந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்களைக் கொண்ட ஒரு குழுவின் மேற்பார்வையின் கீழ், தகுதி வாய்ந்த, திறமையான மற்றும் அக்கறையுள்ள ஊழியர்களைக் கொண்ட குழுவால் CHERISH நடத்தப்படுகிறது. எங்கள் மையத்தின் அன்றாட தேவைகளுக்கான இயக்கத்திற்கு நாங்கள் முற்றிலும் பொதுமக்களின் ஆதரவை நம்பியுள்ளோம்.






கேமரன் மலை மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் எங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எங்களைப் பற்றி மேலும்
CHERISH என்பது கேமரன் ஹைலேண்ட்ஸ் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகள் கல்வி, நல்வாழ்வு மற்றும் தகவல் தரும் மையம் என்பதைக் குறிக்கிறது. நாங்கள் CHERISH என்றும் அழைக்கிறோம்.
2007 ஆம் ஆண்டு ஓர் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனமாக இந்தக் குளிர்ச்சியான அழகிய மலைப் பகுதியில் செயல்பட தொடங்கியது . பல ஆண்டுகளாக, மேலும் நாங்கள் கேமரன் ஹைலேண்ட்ஸ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த சிறப்புத் தேவைகள் கொண்ட கிட்டத்தட்ட 40 குழந்தைகளைப் பராமரித்தோம்.
எங்கள் இருப்பிடம்
ரூமா செரிஷ், எண். 85, பெர்சியாரன் கேமெலியா 1, ஜூதா வில்லா, தானாராத்தா , 39000 கேமரன் ஹைலேண்ட்ஸ் என்ற முகவரியில் உள்ள வாடகை குடியிருப்பில் அமைந்துள்ளது. இது தானா ராத்தாவில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் வளாகம் / ஞாயிறு இரவு சந்தைக்கு எதிரே உள்ளது.



“
We know that equality of individual ability has never existed and never will, but we do insist that equality of opportunity still must be sought.
— Franklin D. Roosevelt
எங்கள் அறிமுக வீடியோவை (ஆங்கிலம்) இங்கே பாருங்கள்:
மாண்டரின் மொழியில் எங்கள் அறிமுக வீடியோவைப் பாருங்கள்: